ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, காடன் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவும் நடிக்க வருகிறார். தம்பி நடிக்கும் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இதற்கான முறையான அறிவிப்புகள் ஜனவரி மாதம் வெளியிடப்பட இருக்கிறது.
6