நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க விதிமுறைகளின் படி அறக்கட்டளையின் தலைவராக நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் இருப்பார். அவருடன். கமல்ஹாசன், பூச்சி முருகன், ராஜேஷ், லதா, கோவை சரளா, சச்சு ஆகியோரும் நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
32
நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணிக்கு கமல்ஹாசன் நேரடியாகவே ஆதரவு தெரிவித்தார். இப்போது பாண்டவர் அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் கமல்ஹாசன் நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.