ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் நடித்த ஜெயம் ரவி மீண்டும் அப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் நடிக்கும் படம் பூமி. இதில் நாசா விஞ்ஞானியாக நடிக்கிறார் ரவி. நிதி அகர்வால் ஹீரோயின். படம் பற்றி இயக்குனர் லக்ஷ்மன் கூறும்போது,’நாசாவில் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராயும் விஞ்ஞானி அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு நம்மூர் விவவாசாயத் தொழில் செய்ய வருகிறார் ஜெயம் ரவி. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தை அழித்து நீர்வளத்தை சுரண்டுவதையும், விவசாயிகளை அடிமைகளாக மாற்றும் அடாவடியையும் தட்டிக் கேட்கிறார். விவசாயிகள் தற்கொலை, மற்றும் விவசாய பிரச்னைகளைப் பற்றி மட்டுமே அல்லாமல் அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது இப்படம். கிராமத்து பெண்ணாக நிதி அகர்வால் நடிக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். டி.இமான் இசை. டியுட்லே ஒளிப்பதிவு செய்கிறார்’ என்றார் இயக்குனர். பூமி படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்துக்காகவும், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்திற்காகவும் நீண்ட கூந்தல் வளர்த்திருக்கிறார் ஜெயம் ரவி.
6