6
கிளைமாக்ஸ் என்ற படத்தை இணையதளத்தில் வெளியிட்டார், இயக்குனர் ராம் கோபால் வர்மா. இதில் வந்த பல நெருக்கமான காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது ஏடிடி தளத்தில், நேக்கட் நங்கா நக்னம் என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட்டு இருக்கிறார். புதுமுகம் ஸ்வீட்டி கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுகுறித்து ராம் கோபால் வர்மா கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் வெளியீடு என்பது தவிர்க்க முடியாதது. எனது சமீபத்திய படத்தை ஆபாச படம் என்று விமர்சனம் செய்கிறார்கள். அது கிளர்ச்சியூட்டும் படம். என் ரசிகர்கள் தனியாகவே பார்க்கட்டும்.
திட்டுபவர்களின் வாழ்க்கையோடும் என் படம் தொடர்பில் இருக்கும். தணிக்கை என்பது இனி காலாவதியான விஷயமாகும். சினிமா படைப்பாளிகளுக்கு முழுமையான சுதந்திரம் இருக்கும். அடுத்து, 12.ஓ கடிகாரம் என்ற படத்தை இணையத்தில் வெளியிடுகிறேன். மர்டர் ஆஃப் தி லவ் என்ற படம் பிறகு வெளியாகும்’ என்றார்.