அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இருவரும் ‘குற்றம் 23’ படத்திலும், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரிலும் பணியாற்றினர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்திருக்கும் படம், ‘பார்டர்’. ஹீரோயின் களாக ரெஜினா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள் ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய படம், நிறைய காரணங்களால் வெளியாகவில்லை. இந்தநிலையில், கடந்த 24ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆனால், எப்போது படம் ரிலீசாகும் என்று தெரிவிக்கவில்லை.
37