கமலுடன் அன்பே சிவம், விக்ரமுடன் ஜெமினி, அஜீத்துடன் வில்லன், பிரசாந்த் துடன் வின்னர், அர்ஜூனுடன் பரசுராம் போன்ற படங்களில் நடித்தவர் கிரண். திடீரென்று சரிந்த மார்க்கெட்டால் அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். ஆனாலும் மார்க்கெட் பிக் அப் ஆகவில்லை. சில வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தில் 23 வயது பெண்ணுக்கு தாய் ஆக ரீஎன்ட்ரி ஆனார். அதில் ஆன்ட்டி என்று சொல்லி அவரை சந்தானம் நக்கலடிப்பார். அதன்பிறகு ரசிகர்களும் அவரை ஆன்ட்டி என்று நக்கலடித்து கமென்ட் பகிர்ந்தனர். அதைக்கண்டு கோபம் அடைந்த கிரண் தன்னை ஆன்ட்டி என்று கூறியவர் களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தார். கடுமையான உடற்பயிற்சி செய்து பல கிலோ எடை குறைத்தார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இளமை தோற்றத்துக்கு மாறினாராம். கடந்த சில மாதங்களாக தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சியான உடைகள் அணிந்து போஸ் அளித்து படங்களை பகிர்ந்து வரும் கிரண், ‘என்னையா ஆன்ட்டினு சொல்றீங்க… இப்ப எப்படியிருக்கேன்’ என்று கேட்டிருக்கிறார். உடற்கட்டை ஸ்லிம்மாக்கி புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கும் கிரண் மீண்டும் கதாநாயகியாக நடிக்க சில இயக்குனர்களுக்கு தூது விட்டு வருகிறாராம்.
31