சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு எல்லா நடிகைகளும் தங்கள் கிளாமர் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தி வருகின்றனர். முதலில் டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றோ அல்லது தொடரில் நடித்தோ பிரபலமாகும் சில நடிகைகள், சமூக வலைத்தளங்களில் தங்களின் உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு, அவற்றை திரைப்பட இயக்குனர்களின் பார்வைக்கு அனுப்புகின்றனர். இதில் ஓரிரு நடிகைகளுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தர்ஷா குப்தாவுக்கு ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், விலையுயர்ந்த கார் வாங்கி அதையும் விளம்பரப்படுத்திய ஷிவானி நாராயணனுக்கு ‘விக்ரம்’ படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு கிடைத்துள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
5