தென்னிந்திய படங்களில் பிசியாக இருக்கும் சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்த விளம்பர வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதன் மூலம் வருமானம் பெற்று வருகிறார்.இந்த நிலையில் பிரபல மது நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் சமந்தா நடித்துள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மது விளம்பரத்தில் நேரடியாக நடிக்கவிட்டாலும் இதுவும் அந்த மதுவை புரமோட் பண்ணும் வேலைதான் என்று நெட்டிசன்கள் சமந்தாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
12