திருவனந்தபுரம்: மலையாள நடிகர் கேலு (90), வயது மூப்பு காரணமாக காலமானார். ‘சால்ட் அன்ட் பெப்பர்’, ‘பழசி ராஜா’, ‘சாவர்’, ‘உண்டா’, ‘பிளாக் காப்பி’ உள்பட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அவர், வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகி, வயநாடு அருகிலுள்ள மானந்தவாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு மனைவி புஷ்பா, மகன் மணி, மகள் ரமா உள்ளனர். கேலு மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
34