சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். மாறன் படத்தில் தனுசுடன் மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 11ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
30