மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பில் எம்.பி.மகேந்திரன், பி.பாலகுமார் தயாரிக்கும் புதிய படத்தை கதை எழுதி நடிகர் போஸ் வெங்கட் இயக்குகிறார். ஏற்கனவே இவர், கன்னி மாடம் என்ற படத்தை இயக்கி இருந்தார். உறியடி விஜயகுமார், பசுபதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, இனியன் ஜே ஹாரிஸ். இசை, ஹரி சாய். பாடல்கள், விவேகா. திரைக்கதை, வசனம்: பாஸ்கர் சக்தி. நீரின்றி அமையாது உலகு. நீருக்கும், ஊருக்கும், போருக்கும் உள்ள தொடர்புகளை சமுதாய கண்ணோட்டத்துடன் சொல்லும் படமாக உருவாகிறது.
5