பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த அதிதிராவ் தற்போது தென்னிந்திய மொழி
படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். காற்று வெளியிடை, செக்க சிவந்த
வானம், சைக்கோ படங்களில் நடித்தவர் தற்போது ஹேய் சுனாமிகா, துக்ளக் தர்பார்
படங்களில் நடித்து வருகிறார். அதிதிராவ் பாலிவுட் படங்களில் இனி நடிக்க
மாட்டார். மும்பையை காலி செய்து விட்டார் என்ற தகவல்கள் பரவி உள்ளது. இதுகுறித்து
அவர் கூறியிருப்பதாவது: நான் மும்பையை காலி செய்து விட்டேன் என்று
அடிக்கடி கூறப்படுகிறது. நான் எங்கும் செல்லவில்லை. வாய்ப்புகள் என்னை
எங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கு செல்கிறேன். நல்ல படங்கள் அமையும்போது
நான் ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறேன். தென்னிந்திய மொழிகளில் நல்ல
கதைகள் கிடைக்கிறது நடிக்கிறேன். பாலிவுட்டில் நான் நடித்துள்ள தி
கேர்ள் ஆன் தி டிரைய்ன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சின்ன சின்ன
வேடங்களில் நடிப்பதாக சொல்கிறார்கள். நான் சின்ன படங்களில் இருந்து
வந்தவள். எனக்கு கேரக்டரின் நீளம் முக்கியமில்லை. அதன் ஆழம்தான்
முக்கியம்.பத்மாவதி படத்தில் பத்மாவதி கேரக்டருக்கு அடுத்தபடியாக நான்
நடித்த மெஹருன்னிசா கேரக்டர்தான் பேசப்பட்டது. எனக்கு மொழி முக்கியமல்ல.
கதையும், கேரக்டருமே முக்கியம் என்றார்.
5