யூ டியூப் சேனல் மூலம் பிரபலமானவர் பிராங்ஸ்டார் ராகுல். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டியவர் வேலன் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: வேலன் படத்தில் எனக்கு இவ்வளவு முக்கியமான கதாபாத்திரம் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே கூத்தும், கும்மாளமுமாகவே இருந்தது. சூரி சாரின் அற்புதமான நகைச்சுவை உணர்வு எங்களை முழுவதுமாக மகிழ்வித்தது. திரையில் நான் தோன்றும் வகையில் அதிக காட்சிகளைக் கொடுத்த, வேலன் திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனக்கு ஒரு அழகான திரைப்படம் மற்றும் கதாப்பாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் , இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேலன் ஒரு அழகான குடும்ப திரைப்படம், நிச்சயமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப பார்வையாளர்களுக்கு விருப்பமான திரைப்படமாக இருக்கும். என்றார்.
91