5
தமிழில் வெளியான பாபநாசம், தம்பி ஆகிய படங்களின் இயக்குனரான ஜீத்து ஜோசப், நட்சத்திர குடும்பமான சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, சூர்யாவின் மனைவி ஜோதிகா இணைந்து நடிப்பதற்கான கதையை உருவாக்கி வருகிறார். தற்போது ஜீத்து ஜோசப், மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். இதில் மோகன்லால், திரிஷா நடிக்கும் ராம் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது. காரணம், கொரோனா லாக்டவுன். வெளிநாடு சென்று சில முக்கிய காட்சிகளை தற்போது படமாக்க முடியாத நிலை. அடுத்த படம், மோகன்லால் நடிக்கும் த்ரிஷ்யம் 2. சூர்யாவின் குடும்பம் நடிப்பதுபோல் மெகா பேமிலி படத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், கீர்த்தி சுரேஷ். அவரது தந்தை சுரேஷ் குமார், மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளர். அம்மா மேனகா, முன்னாள் ஹீரோயின். பாட்டி சரோஜா, நடிகை. அக்கா ரேவதி, சினிமா படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார். விரைவில் இப்படம் குறித்து கீர்த்தி அறிவிக்கிறார்.