வரும் 3ம் தேதி திரைக்கு வரும் பேச்சிலர் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக அறிமுகமாகும் திவ்யபாரதி, திடீரென்று மேடையில் கதறியழுதது உருக்கமாக இருந்தது. பட விழாவில் அவர் பேசும்போது, ‘எனக்கு எந்த சினிமா பேமிலி பேக்கிரவுண்டும் கிடையாது. நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. இந்த படத்தின் டைரக்டரும், புரொடியூசரும் நினைச்சிருந்தா, பிரபல ஹீரோயினை நடிக்க வெச்சிருக்கலாம். அது இந்த படத்துக்கு இன்னும் பெரிய மைலேஜ் கொடுத்திருக்கும். குறிப்பா, கிளைமாக்ஸ் ஷூட் பண்றப்ப பயத்துல அழுதுட்டேன். ஏன்னா, சதீஷ் செல்வகுமாருக்கு இந்த படம் பத்து வருஷ கனவு. என்னால் அது கலைஞ்சிட கூடாதுன்னு பதற்றமா இருந்தது. உன்னால் இந்த சீன்ல நல்லா பெர்ஃபாம் பண்ண முடியும்னு நம்பிக்கை வெச்சு, எனக்கு தைரியம் கொடுத்து சிறப்பா நடிக்க வெச்சார். ஜி.வி.பிரகாஷும் நிறைய சீன்களில் ஹெல்ப் பண்ணார். எனக்கு எல்லாமே அம்மாதான். சிங்கிள் மதரா இருந்து என்னை வளர்த்து ஆளாக்கி, முழு சுதந்திரத்தோட நடிக்க பெர்மிஷன் கொடுத்தார். அவருக்கு நான் எப்படி…’ என்று சொல்லும்போது கதறியழுதார். இது பார்வையாளர்களை நெகிழவைத்தது.
28