கவர்ச்சி பொங்கி வழியும் படங்களை டிவிட்டரில் அடிக்கடி வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை வளைத்துபோட்டு கொண்டிருக்கிறார் யாஷிகா. அவரது அழகை பாராட்டியும், இப்படி கூடவா டிரஸ் போடுவீங்க என்று கலாய்த்தும் பலர் கமென்ட் பகிர்வதுண்டு. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது பணியை செவ்வனே செய்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜிம்மிற்கு சென்ற யாஷிகா அதிர்ச்சி தரும் அளவிற்கு கனமான பளுவை தூக்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்டு, ‘புரோ நீங்க இவ்வளவு பெரிய பளுவ தூக்குவீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். அவரது முயற்சியை பலர் பாராட்டிய நிலையில் இவ்ளோ பெரிசு என்ன அந்த வெயிட்டோட சேர்த்து உங்களையும் தூக்குவோம் என்று சிலர் பதில் அளித்துள்ளனர்.
7