சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். தனுஷ், மாளவிகாக மோகனன் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் ‘பொல்லாத உலகம்’ என்ற பாடல் வீடியோ யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான கோலிவுட் படங்களின் வீடியோ பாடல்களில் இதுவே 24 மணி நேரத்தில அதிக பார்வைகளை பெற்ற பாடலாக கருதப்படுகிறது. இதுவரை இப்பாடல் 64 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. தனுஷ் பாடி ஆடிய கொலைவெறி, ரவுடி பேபிக்கு இணயைாக இந்த பாடலும் சாதனை படைக்கும் என்கிறார்கள்.
7