தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தர்பார் படத்தில் ‘சும்மா கிழி..’ பாடலுக்கு ஸ்டைலான குத்தாட்டம் போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதை பார்ப்பவர்கள் இந்த வயதிலும் எப்படி இளமை துள்ளல் மெயின்டெய்ன் செய்கிறீர்கள் என்று பலரும் அவரை நெட்டில் கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசியிருக்கிறார் ரஜினி. எல்லா வயதிலும் இளமையாக, அமைதியாக வாழ்வதற்கு ஒரு சிலவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என அட்வைஸ் வழங்கி உள்ள ரஜினி,’ஆசை, கவலை, உணவு, தூக்கம் மற்றும் பேச்சு ஆகியவற்றை குறைத்துக் கொண்டால் கண்டிப்பாக எனர்ஜியாக, நிம்மதியாக வாழ முடியும்’ என தெரிவித்துள்ளார். தர்பார் படத்துக்கு வெளிநாட்டு கலைஞர்களை வைத்து இசையமைத்த அனிரூத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தினா கண்டனம் தெரிவித்துள்ளார்.
33