2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை மட்டுமின்றி, மற்றவர்கள் நடிக்கும் படத்தையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளார் சூர்யா. அதுபோல் அவர் தயாரிக்க உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அறிமுக டைரக்டர் அரிசில் மூர்த்தி படத்தை இயக்குகிறார். ஹீரோவாக மித்துன் மாணிக்கம் அறிமுகமாகிறார். இவர்களுடன் கோடங்கி வடிவேல், முருகன், செல்வேந்திரன், ஆவுடையப்பன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக முக்கிய வேடத்தில் வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாக இருப்பதாக சூர்யா இதில் பங்கேற்கவில்லை. பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது.
29