ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ராம் சரண், தனது வி மெகா பிக்சர்ஸ் நிறுவனத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விக்ரம் ரெட்டியுடன் இணைத்துள்ளார். இதை தொடர்ந்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’ ஆகிய படங்களை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் வி மெகா பிக்சர்ஸ் இணைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வரும் பான் இந்தியா படத்துக்கு ‘தி இந்தியா ஹவுஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடிக்க, முக்கியமான வேடத்தில் அனுபம் கெர் நடிக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர், கதைக்களம் பற்றி சொல்வதாக அமைந்துள்ளது. ஆனால், இந்தப் படத்தில் அழுத்தமான ஒரு காதல் கதை இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
78