இளவட்ட நடிகைகளில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பவர்கள் ராஷ்மிகா மந்தன்னா, மாளவிகா மோகனன். விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் மாளவிகா நடிக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியானது. தற்போது சூர்யாவுடன் நடிப்பது மாளவிகா அல்ல ராஷ்மிகா என கூறப்படுகிறது. டியர் காம்ரேட் படத்தில் விஜயதேவரகொண்டாவுடன் நடித்த ராஷ்மிகா மந்தன்னா தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் நடிக்க அவரிடம் பட தரப்பு பேசி வருதாக கூறப்படுகிறது. இதுவரை பேச்சு பேச்சாகத்தான் இருக்கிறதாம், எந்த நடிகையும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்கிறது பட வட்டாரம்.
ராஷ்மிகாவா, மாளவிகாவா…… சூர்யாவுக்கு ஜோடிபோடுவது யார்?
0 comment
29