பர்மா, ராஜா ரங்குஸ்கி, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் இப்போது உருவாக்கி வரும் படம் ரேன்ஞ்சர். இந்த படத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன் உள்பட பலர் நடித்துள்ளனர். தற்போது படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் சிபிராஜ் காட்டிலாகா அதிகாரியாக நடித்துள்ளார். ஊருக்குள் அட்டகாசம் செய்யும் ஒரு புலியை பிடிக்கும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்படுகிறது. அதனை அவர் எப்படி செய்து முடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் கிராபிக்ஸ் புலியை உருவாக்கி வருகிறார்கள். சிறிய முதலீட்டில் உள்நாட்டு கிராபிக்ஸ் நிபுணர்களை கொண்டு இந்த புலி உருவாக்கப்படுகிறது. இது இந்திய அளவில் பேசப்படும். என்கிறார் இயக்குனர் தரணிதரன்.
23