எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் அழகிய கண்ணே. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார். பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் வெளிவருகிறது.
லியோனி மகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் விஜய்சேதுபதி
0 comment
31