அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா கடந்த 17ம் தேதி வெளிவந்தது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீ லட்சுமி வாங்கி வெளியிட்டது. இந்த படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 4.08 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக புஷ்பா உருவெடுத்துள்ளது. உலகம் முழுக்க முதல் நாளில் 40 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
29