அப்புக்குட்டி, வசுந்தரா நடித்துள்ள படம், வாழ்க விவசாயி. இயக்கம், பி.எல்.பொன்னி மோகன். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், இப்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. படம் தாமதமானது குறித்து அப்புக்குட்டி கூறியதாவது: விவசாயியின் மகனான நான், இப்படத்தில் விவசாயியாக நடித்துள்ளேன். பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய இப்படம் சற்று தாமதமானது குறித்து வருத்தமாக இருக்கிறது. தர்பார் ரிலீசானதால் தேதி மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை மிகப் பெரிய போராட்டமாக இருப்பது போல், இப்படத்தின் வெளியீடு மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம்.
வாழ்க விவசாயி பொங்கலுக்கு வராதது ஏன்? – அப்புக்குட்டி
0 comment
7