கொரோன அலை முடிவுக்கு வந்து கொண்டிருந்தாலும், அது திரைப்பட நட்சத்திரங்களை தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கிறது. கமல்ஹாசன், அர்ஜூன் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் விக்ரமுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் இருப்பதால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். விக்ரம் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
27