உலகம் முழுக்க விஜய் ரசிகர்கள் அவருக்காக எதையாவது ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். கேரளா ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்தனர். அதேபோன்று கனடா நாட்டில் வாழும் அவரது ரசிகர்கள் அவருக்காக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தீ தீ தளபதி என்ற இந்த ஆல்பத்துக்கு இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் பாடலை எழுதி, ஜனனியுடன் பாடி உள்ளார். கனடாவின் டொரோண்டாவில் உள்ள எக்ஸோடஸ் ஸ்டூடியோவில் இதனை உருவாக்கி உள்ளனர். தற்போது யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கனடா விஜய் ரசிகர்கள் மன்ற தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது: இப்படி ஒரு முயற்சியை நாங்கள் தொடங்கிய போது பிரபலமான ஒருவர்தான் இசை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அஜீத் நடித்த படங்களுக்கு இசை அமைத்த பரத்வாஜ் விஜய் படத்துக்கு இசை அமைக்க முடியாத மனக்குறையை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டு இசை அமைத்துக் கொடுத்தார். இந்த பாடல், நிச்சயம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்கும். என்றார்.
28