27
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீசாகிறது. ஒரே சமயத்தில் பல படங்களில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது குறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘படம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் கஷ்டப்படும் இயக்குனருக்காக அவர் படங்கள் நடிக்கிறார்.
எமோஷனலாக 10 படங்கள் நடிக்கும் விஜய் சேதுபதி, தனக்காக ஒரு படத்தில் நடிக்கிறார். டைரக்டராகும் சந்தோஷத்தை அறிமுக இயக்குனர்களுக்கு அவர் வழங்குகிறார். அவர் நினைத்தால் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே ஏற்று நடிக்க முடியும். பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே கூட நடிக்கலாம். ஆனால் புதுமுக இயக்குனர்கள் பலருக்கு அவர் வாய்ப்பு தருகிறார்’ என்றார்.