ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கும் படம், ‘மழை பிடிக்காத மனிதன்’. இதில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், கன்னட நடிகர்கள் தனஞ்செயா, பிருத்வி அம்பர் நடிக்கின்றனர். இயக்குனர் ரமணா வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனி ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். டாமன், டையூ பகுதிகளில் படமாக்கப்படும் முதல் தமிழ் படமான இது, அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜயகாந்த் நடிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை. தற்போது அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6