களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் விமல். அவருக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,’ நடிகர் விமல் தயாரித்த, மன்னர் வகையறா படத்திற்கு, என்னிடம் கோடிகளில் கடன் வாங்கினார். குறிப்பிட்ட தொகை மட்டுமே திருப்பி கொடுத்துவிட்டு, மீதித்தொகையை, படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தில் இருந்து தருவதாக கூறினார். அவர் நடிப்பில் 7 படங்கள் வந்துவிட்டது. இன்னும் பணம் தரவில்லை. விமல் நடித்த படம் வெளியிடும் முன் என்னிடம் ஆலோசிக்க கேட்டுக் கொள்கிறேன். இதில் வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.
31