பாலிவுட்டின் முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி. கேங்ஸ் ஆஃப் வஸீப்பூர், ஸ்ட்ரீ, மிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிர்ஸாபூர்’ வெப் சிரீஸ் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். பங்கஜ் திரிபாதியை விளம்பர படத்தில் நடிக்க சிலர் அணுகி உள்ளனர். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு நடிகன்; வியாபாரி அல்ல. என்னுடைய நாட்டின் பொறுப்புள்ள ஒரு குடிமகனும் கூட. நான் சொல்வதையும், செய்வதையும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பணத்துக்காக நான் ஏன் விளம்பரத்தில் நடிக்க வேண்டும்? நான் என்னுடைய கலைக்கு உண்மையானவனாக இருந்து வருகிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். நான் பயன்படுத்தும் பொருட்களையும், சமூகத்துக்கு எந்தவிதத்திலும் கேடு விளைவிக்காத பொருட்களையும் மட்டுமே நான் விளம்பரப்படுத்த வேண்டும். அதுதான் என்னுடைய பொறுப்பு. இவ்வாறு பங்கஜ் திரிபாதி கூறியுள்ளார்.
விளம்பர படங்களில் நடிக்க பங்கஜ் திரிபாதி நிபந்தனை.!
0 comment
34