டிபிகே இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் டில்லிபாபு தயாரிக்கும் படம் டைட்டில். விஜித் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அஸ்வினி சந்திரசேகர் நாயகியாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர மைம் கோபி, மாரிமுத்து ரோபோ சங்கர், மதுமிதா, பிளாக் பாண்டி, ரேகா, கூல் சுரேஷ் நடிக்கிறார்கள். ரகோத் விஜய் இயக்குகிறார், தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் ஆகாஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரகோத் விஜய் கூறியதாவது: விவசாய நிலங்களை என்ஆர்ஐ மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு ஆசைகாட்டி விவசாயிகளிடம் இருந்து எந்த இடைஞ்சலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிலங்களை வாங்கிக் கொடுக்கும் கும்பலுக்கும் விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் குடும்பத்திற்கும் நடக்கும் பிரச்சனைகள், அவர்களின் நிலங்களை பறிக்க போடும் திட்டங்கள், அவற்றையெல்லாம் எப்படி முறியடித்து நிலத்தை காக்கின்றனர் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லும் படம் என்றார்.
27