வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. வெங்கட்பிரபு மாநாட்டுக்கு பிறகு அஜீத் படத்தை இயக்குகிறார், ரஜினி படத்தை இயக்குகிறார் என்கிற வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
26