ஆர்ஆர்ஆர் படத்தை வேகமாக படமாக்கி வருகிறார் டைரக்டர் ராஜமவுலி. அக்டோபர் 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அவர் அறிவித்துவிட்டார். இதனால் ஏப்ரலுக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை தொடர்ந்து 15 நாட்களாக படமாக்க முடித்துள்ளார். இப்போது படத்தில் வரும் முக்கியமான வசன காட்சிகளை படமாக்கி வருகிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள்தான் சவாலானவை. அதனால் அதை முதலில் படமாக்கி முடித்துவிட ராஜமவுலி திட்டமிட்டாராம். அதன்படி படத்தில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தையும் அவர் படமாக்கிவிட்டார். இப்போது பாடல் காட்சிகளுடன் சில முக்கிய காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். படப்பிடிப்பு முடித்ததும் கிராபிக்ஸ் காட்சிகளும் நிறைய உள்ளதாம். பாகுபலி அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் ராஜமவுலி கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் இதில் 30 சதவீதம் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். இதை முடிக்க 3 மாதமாகும் என விஷுவல் எபெக்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
36