சென்னை: வேட்டையாடு விளையாடு 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது உறுதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் வௌிவந்த படம் வேட்டையாடு விளையாடு. கவுதம் மேனன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் இருப்பதாக கவுதம் மேனன் கூறிவந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், ‘வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என கவுதம் மேனன் கூறியிருக்கிறார். நானும் அதற்கு தயாராக இருக்கிறேன். ஐசரி கணேஷ் அந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். எப்போது ஆரம்பிக்கலாம் என்பதை கவுதம் மேனன் தான் சொல்ல வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்த கவுதம் மேனன், ‘இந்த படத்துக்கான திரைக்கதையை ஜெயமோகன் எழுதி வருகிறார். அந்த பணியை முடித்ததும் ஆரம்பித்துவிடலாம்’ என்றார். ‘இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது உறுதி. இதில் நடிக்க நான் ஆவலுடன் இருக்கிறேன். இதுபற்றி உடனே பேசி முடிவு செய்துவிடலாம் என ஐசரி கணேஷும் கூறியிருக்கிறார்’ என கமல்ஹாசன் சொன்னார்.
வேட்டையாடு விளையாடு 2 விரைவில் உருவாகிறது: கமல்ஹாசன் தகவல்
0 comment
13