1980 மார்ச் 10ம் தேதி, பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில், இளையராஜா இசையில் ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடல் எழுதியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வைரமுத்து. 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்ற இவர், அனைத்து இசை அமைப்பாளர்களுடன் இணைந்து 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 5 தலைமுறை நடிகர், நடிகைகளுக்கு எழுதியுள்ள அவர், சாகித்ய அகாடமி மற்றும் இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார். அவர் தனது 41வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து, கணேஷ் பாபு ஹீரோவாக நடித்து இயக்கும் கட்டில் என்ற படத்துக்காக, ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் எழுதியுள்ளார். சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.லெனின் எடிட்டிங் செய்கிறார்.
7