30
ஆதி அண்ணன் சத்ய பிரபாஸ் 5 வருடங்களுக்கு முன் இயக்கிய யாகாவாராயினும் நா காக்க என்ற படத்தில் ஜோடி சேர்ந்த ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். காரணம், இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதுகுறித்து இதுவரை இருவரும் வாய் திறக்கவில்லை என்றாலும், சில மாதங்களுக்கு முன் ஆதியின் தந்தையும், தெலுங்கு இயக்குனருமான ரவிராஜா பினிஷெட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையில் நடந்தபோது, அதில் நிக்கி கல்ராணி பங்கேற்றதில் இருந்து இத்தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஒரே அபார்ட்மெண்டில் வசிக்கும் ஆதி, நிக்கி இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருவதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். சமீபத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் லக்கேஜூடன் அவர்கள் நடந்து செல்லும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.