குறும்பட இயக்குனர் தாமோதரன் இயக்கும் திரைப்படம் ஆத்மிகா. இப்படத்தில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம் ,நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த்நாக் நாயகனாக நடித்துள்ளார் .சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா முத்துசிவம் நாயகியாக நடித்துள்ளார் .மற்றும் ஜீவா ரவி , பிர்லா போஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார் . சரண்குமார் இசையமைத்துள்ளார். சென்னை ,கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தைப் பற்றி இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் கூறும்போது, இது குறும்பட கலைஞர்கள் உருவாக்கிய பெரும் படம். புதுமையான அனுபவத்தை தரும் படமாக இருக்கும் என்றார்.
5