33
என்னதான் சினிமாவில் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், சிலருக்கு ஏதாவது ஒரு தொழிலும் கைவசம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். டாப்ஸி, தமன்னா, ரகுல் பிரீத் சிங், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் திருமணம் நடத்திக் கொடுக்கும் கம்பெனி, வைரம் பிசினஸ், உணவகம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று, தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் ஈடுபட்டுள்ளனர். பல நடிகைகள் டி.வி மற்றும் வெப்தொடர் தயாரிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சில நடிகைகள் ஓடிடி தளத்துக்கு படம் உருவாக்குகின்றனர்.
நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப சைடு பிசினஸில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலபேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. நாளையபொழுதும் உன்னோடு, வைதேகி, வாய்மை, முப்பரிமாணம் உள்பட சில படங்களில் நடித்துள்ள பிருத்வி பாண்டியராஜன், தற்போது ஒபாமா, லாபம் ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சென்னை திநகரிலுள்ள தனது வீட்டில் ஆன்லைன் உணவகம் நடத்தி வருகிறார்.