ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷுடன் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வருவதாக நடிகை அனு இமானுவேல் குறித்து கிசு கிசு கிளம்பியுள்ளது. தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அனு இமானுவேல். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அல்லு சிரிஷுடன் நடித்தபோது இவருக்கு காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் பாணியில் சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் பரவியுள்ளது. இது பற்றி அனு இமானுவேல் கூறும்போது, ‘அல்லு சிரிஷுடன் காதல் என அவ்வப்போது சில மீடியாக்கள் தகவல் பரப்புகின்றன. அது முடிந்துபோன கதையாக நினைத்திருந்தேன். ஆனால் இப்போது ஒருபடி மேலே சென்று நாங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள். இது எல்லாமே கட்டுக்கதை. இதில் சிறிதும் உண்மை கிடையாது. அல்லு சிரிஷும் நானும் நல்ல நண்பர்கள்தான். எங்களுக்குள் எந்த தொடர்பும் கிடையாது. இப்போதைக்கு நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. நிறைய கதைகள் கேட்கிறேன். எனக்கு பிடித்த வேடத்தை மட்டுமே ஏற்கிறேன்’ என்றார்.
41