தற்போது சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கழித்து வரும் சமந்தா அங்கு பனிசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்த விளையாட்டில் அவர் சறுக்கி கீழே விழுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது இதுகுறித்து சமந்தா ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு சறுக்கலில் ஒரு குழந்தையை விட்டால் எப்படி அது விளையாடுமோ.. அப்படித்தான் இந்த பயணத்தை தொடங்கினேன். இருந்தாலும் மறுபடி மிகவும் பணிவாக தொடங்கிய இந்த பனிச்சறுக்கில் நான் ஒரு நூறு தடவை விழுந்து விட்டேன். அப்படி நூறு தடவை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்தேன். ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு போய் விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் நான் அதை விடவில்லை. மீண்டும் மீண்டும் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தேன். இப்போது நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். சமந்தாவின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையோடு இந்த பதிவை ஒப்பிட்டு பலரும் சமந்தாவுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
111