ஐதராபாத்: இன்ஸ்டாகிராம் தளத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘திரட்ஸ்’ என்ற சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் சாதனை படைத்துள்ளார். முகநூல் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பார்க் புதிய கண்டுபிடிப்பு தளமான திரெட்ஸ் தளத்தில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். திரெட்ஸ் கணக்கை திறந்து அவர் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே பகிர்ந்துள்ளார். அதற்குள் அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து தற்போது 1 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற இந்தியாவின் முதல் நடிகர் என்ற சாதனை படைத்திருக்கிறார். முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிவிரைவில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற தென்னிந்திய நடிகர் என்ற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு உள்ளது.
72