மலையாள நடிகர் மம்மூட்டி தற்போது ‘தி பிரீஸ்ட்’ மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. லாக்டவுன் அமலானதால், மம்மூட்டி வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. பிறகு கடந்த மார்ச் 5ம் தேதி கொச்சி பனம்பிள்ளி நகர் வீட்டில் இருந்து அம்பேலிபாடம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று தங்கிய அவர், வெளியே எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. புத்தக வெளியீட்டு விழாவை தனது வீட்டிலேயே நடத்தினார்.பிறகு கேரளாவில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மீண்டும் மலையாளப் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கியது. ‘திரிஷ்யம் 2’ என்ற படத்தில் மோகன்லால் நடிக்க தொடங்கினார். மம்மூட்டி மட்டும் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவில்லை. நடைப்பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. போட்டோகிராபியில் ஆர்வம் இருந்ததால், தனது வீட்டு தோட்டத்துக்கு வந்த பறவைகளை போட்டோ எடுத்து பொழுதுபோக்கினார். நிறைய புத்தகங்கள் படித்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென்று தனது காரில் நண்பர்களுடன் வெளியே சென்ற மம்மூட்டி, கொச்சியை சுற்றிப் பார்த்தார். பிறகு கலூர் என்ற இடத்தில் காரை நிறுத்தி, அங்குள்ள டீக்கடையில் பிளாக் டீ குடித்தார். 275 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த மம்மூட்டியின் போட்டோ மற்றும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
6