சென்னை: தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்டு்க்காக எம்.தேவராஜூலு பிரமாண்ட முறையில் தயாரித்துள்ள படம், ‘டீசல்’. ஹரீஷ் கல்யாண் நடித்த முதல் முழுநீள ஆக்ஷனுடன் கூடிய கமர்ஷியல் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. அதுல்யா ரவி, சாய்குமார், கருணாஸ், விநய் ராய், அனன்யா, அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, தீனா (தினேஷ்), தங்கதுரை, லட்சுமி சங்கர், ஜார்ஜ் விஜய், நெல்சன், பிரேம் குமார், சச்சின், ரமேஷ் திலக், செல்வி நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். ராஜசேகர் சண்டைக் காட்சி களை வடிவமைத்துள்ளார். சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ளார். இது தவிர ‘நூறு கோடி வானவில்’, ‘எல்ஜிஎம்’, ‘லப்பர் பந்து’, ‘பார்க்கிங்’ ஆகிய நான்கு படங்களில் ஹரீஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
52