ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் படம், ‘குஷி’. இதை சிவ நிர்வானா இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் இடம்பெற்ற ‘என் பொன்னம்மா’ என்று தொடங்கும் 5வது பாடல் வெளியானது. அனைவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று சொல்லும் பாடலுக்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்தார். மதன் கார்க்கி எழுதிய பாடலை விஜய் பிரகாஷ் பாடினார். தமிழில் ‘என் பொன் னம்மா’, தெலுங்கில் ‘ஒஸி பெல்லம்மா’, இந்தியில் ‘மேரி ஜானே மன்’, கன்ன டத்தில் ‘ஹே ஹெண்டாட்டி’, மலையாளத்தில் ‘ஒரு ெபண்ணித்தா’ என்றும் இப்பாடல் தொடங்குகிறது. ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, ஆலி, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, வெண்ணிலா கிஷோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யெலமஞ்சலி தயாரித்துள்ளனர்.
24