7
9 இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் மணிரத்னம். கோலிவுட் இயக்குனர்கள் பலரும் வெப்சீரிஸ் இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் 9 எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இந்த வெப்சீரிஸின் 9 எபிசோடுகளையும் 9 இயக்குனர்கள் தனித்தனியே இயக்க உள்ளனர். கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பிஜய் நம்பியார் ஆகியோர் இயக்க உள்ளனர். நடிகர் அரவிந்த்சாமியும் ஒரு எபிசோடு இயக்குவார் என்று கூறப்படுகிறது. தவிர ஹலீதா ஷமீம், மதுமிதா உள்ளிட்ட இயக்குனர்களும், சில மலையாள இயக்குனர்களும் இதில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு எபிசோடும் வெவ்வேறு ஜானரில் உருவாகும் கதையாக இருக்கும்.