ஐதராபாத்: 45 வயதாகும் பிரபாஸ் நடிகை அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் பிரபாஸ், ‘கல்கி’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை திஷா பதானியுடன் டேட்டிங்கில் இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகை திஷா பதானி PD என்ற டாட்டூவை தனது கையில் பதிந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பிரபாஸ் – திஷா என்பதை தான் PD என்று பச்சை குத்தியிருக்கிறார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதை அறிந்த திஷா பதானி, கடும் கோபத்தில் இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுத்த அவர், என் டாட்டூ மீது நீங்கள் காட்டும் ஆர்வத்தால் மகிழ்ச்சி, ஆனால் அது எதற்காக என்று ஆராயுங்கள். நீங்கள் டைம்பாசுக்காக செய்வது உங்களுக்கு எந்த பயனும் தராது. நான் எதை டாட்டூவாக போட்டால் உங்களுக்கு என்ன? என்று கடும் கோபமாக கேட்டிருக்கிறார் திஷா பதானி.
இவ்வளவு விளக்கம் சொன்ன அவர், அது பிரபாஸ் பெயரை குறிக்கும் டாட்டூ கிடையாது என்று மட்டும் எங்குமே சொல்லவில்லை. இதனால்தான் சந்தேகம் வலுக்கிறது என நெட்டிசன்கள் மீண்டும் திஷாவை வம்புக்கு இழுத்து வருகிறார்கள். பிரபு தேவாவை காதலித்தபோது இதேபோல் PN என்று நயன்தாரா தனது கையில் டாட்டூ போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.