சென்னை: புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானமாக கொடுத்திருக்கிறார் பாடகி நித்யஸ்ரீ. தமிழ், இந்தியில் பல படங்களில் பின்னணி பாடி வருகிறார் நித்யஸ்ரீ. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கிறார். இவருக்கு 1.6 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் நீளமான தனது தலைமுடியை பாதியாக வெட்டியிருக்கிறார். வெட்டிய முடியை புற்றுநோய் மருத்துவமனைக்கு தந்திருக்கிறார். இவரது இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன் தமிழகத்தை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவரும் இதுபோல் செய்திருந்தார். அவருக்கும் பல தரப்பிலிருந்து பாராட்டுகள் கிடைத்தது.