சென்னை: விஎஸ் ஃபிலிம்ஸ் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஜெயபாலா, ஜி. சுகன்யா இணைந்து தயாரிக்கும் படம்‘கரும்புள்ளி கிராமம்’. இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாகவும் கதாநாயகியாக ஸ்வேதா டோராத்தி நடிக்கிறார்கள். யோகி பாபு காமெடி கேரக்டரில் நடிக்கிறார் மற்றும் ஜெய்பீம் மொசக்குட்டி கவிதா ரவி ஜானகி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ராசா ஆனந்த், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் முருகன். இசை ஜெகன் கல்யாண். எடிட்டிங் ராஜேந்திர சோழன். ஒரு குக்கிராமத்தில் உண்மையாக நடந்த காதல் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகிறது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது.