சென்னை: கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி, ஜி.சதீஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள படம், ‘லில்லி’. இதை சிவம் இயக்கியுள்ளார். குழந்தைகள் உலகை மையப்படுத்தி உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவம் பேசுகையில், ‘நான் தெலுங்குதான் என்றாலும், ‘லில்லி’ இப்படத்தின் கதை எழுதுவதற்கு முக்கிய காரணம் சினேகா பாபு. சில வருடங்களாக இக்கதையை எடுத்துக்கொண்டு நல்ல தயாரிப்பாளரை தேடி அலைந்தேன். ஒருவர் கூட கிடைக்கவில்லை. இறுதியில், பாபு ரெட்டி தயாரிக்க ஒப்புக்கொண்டார். பேபி நேஹா கூச்ச சுபாவம் கொண்டவர். அவரை வைத்து முழு படமும் உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் இல்லை, பெரியவர்களுக்கான படம். பேபி நேஹாவை பார்த்த பிறகு என் வாழ்வில் எல்லாமே அதிக சந்தோஷமான மாற்றங்கள்தான். இப்படம் ரசிகர்களின் மனதை இலகுவாக்கும்’ என்றார்.
57